கனடா செய்திகள்

பாலஸ்தீனியர்களுக்கான தற்காலிக விசா திட்டம் தொடர்பில் கனடா குடிவரவு அமைச்சர் வெளியிட்ட தகவல்.

காசாவில் இருந்து தப்பிச் செல்ல விரும்பும் பாலஸ்தீனியர்களுக்கான மட்டுப்படுத்தப்பட்ட (1,000 நபர்களுக்கான) தற்காலிக குடியுரிமை விசாக்களில் மத்திய அரசு விதித்துள்ள வரம்பு, முன்பை போலன்றி தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளது என கனடாவின் குடிவரவு அமைச்சர் Marc Miller, CTV News chennel இன் நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில், பாலஸ்தீனியாவில் வசிக்கும்-கனடியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் CTV News chennel ற்கு கூறுகையில், காசாவில் உள்ள 1,000 பாலஸ்தீனியர்களுக்கு தற்காலிக குடியுரிமை விசாக்களை கட்டுப்படுத்தும் மத்திய அரசின் புதிய திட்டம் நியாயமற்றதும் மனிதாபிமானமற்றதுமாகும் என்று தெரிவித்துள்ளனர்.

கனேடிய குடிமக்களான மற்றும் நிரந்தர குடியிருப்பை (PR) பெற்ற கனடா வாழ் பாலஸ்தீனியர்கள் தங்கள் குடும்பங்க களை சேர்ந்த பாலஸ்தீனியர்களுக்கு நிதி உதவி செய்ய முடிந்தால் அவர்கள் மூன்று ஆண்டுகள் கனடாவில் தங்குவதற்கு இந்த திட்டம் அனுமதிக்கிறது.

அத்துடன் ஒரு விண்ணப்பதாரருக்கு $100 அல்லது ஒரு குடும்பத்திற்கு $500 செலவாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Miller’s department,Immigration,Refugees மற்றும் Citizenship Canada ஆகிய திணைக்களங்கள் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், 1,000 விண்ணப்பங்கள் செயலாக்கத்திற்கு ஏற்றுக்கொண்ட பிறகு அல்லது அது நடைமுறைக்கு வந்து ஒரு வருடத்திற்குப் பின் இத் திட்டம் நிறைவுக்கு வரும் என்று குறிப்பிட்டன.

Related posts

கூடிய விரைவில் கூட்டாட்சித் தேர்தலை நடத்த முயற்சிப்பதாக Poilievre உறுதியளிக்கிறார்

admin

charitable donation வரி விலக்குகளுக்கான காலக்கெடுவை மத்திய அரசு நீட்டிக்கவுள்ளது

admin

Pablo Rodriguez அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தமையால் Trudeau Liberals இற்கு மேலும் சேதம் ஏற்பட்டது

admin