கனடா செய்திகள்

Haitiயில் உள்ள கனேடியர்களின் நிலை தொடர்ந்தும் ஆபத்தில்;

Quebec இல் உள்ள சமூக மற்றும் கலாச்சார மையத்தில் இருந்து Haiti க்கான உதவி தொடர்பில் கனடாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Haiti யின் பிரதமர் Ariel Henry பதவி விலகியதன் பின்னர், சம்மந்தபட்ட குழு தலைவர்கள் இணைந்து Montreal இல் உள்ள Maison d’ Haiti யில், ஒன்று கூடல் நிகழ்வு ஒன்றை நடாத்தினர். இந்த நிகழ்வில் Haiti யில் உள்ள எங்களது நாட்டைச் சேர்ந்தவர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை சுமார் 150,000 புலம்பெயர்ந்த கனேடியர்கள் Quebec இல் உள்ள Haiti யில் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. அத்துடன் அண்மைய நாட்களாக பல கனேடியர்கள் தமது குடும்ப உறுப்பினர்கள் Haiti யில் உள்ள ஆயுததாரிகளிடம் சிக்கியுள்ளதாகவும் அவ்வாறு சிக்கியுள்ளவர்கள் பெரும் சிரமங்களை எதிர் நோக்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

ஆயுதமேந்திய கும்பல்கள், தலைநகரான Port- au-Prince இல் 80% ஆன இடங்களை கைப்பற்றி வைத்துள்ளதால் தமது குடும்பத்தவர்கள் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கனேடியர்கள் பலர் கவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும் அங்கு பஞ்சம் நிலவும் சாத்தியங்கள் நிலவுவதாகவும் விரைவில் தண்ணீர், மருந்து மற்றும் உணவு பற்றாக்குறை ஏற்படும், எனவே அவர்களை விரைவாக மீட்டு தருமாறும் Haiti யில் உள்ளவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

முன் எப்போதும் இல்லாத அளவு ஆர்வம் கொண்டுள்ள கனேடிய தேர்தல் களம்.

canadanews

இத்தாலிக்கான பயணத்தின் போது பல தலைவர்களை சந்திக்கும் கனேடியப் பிரதமர்.

canadanews

Israel இராணுவத்தின் தாக்குதல்களை தொடர்ந்தும் கண்டிக்கும் மேற்குலகம்.

canadanews