கனடா செய்திகள்

இந்த வருடம் முதல்(2024) Highway 407ஐப் பயன்படுத்தவுள்ள Ontario வாகன ஓட்டுனர்களுக்கு கட்டண அதிகரிப்பு.

Highway 407 இன் ஒரு பகுதியைப் பயன்படுத்தும் வாகன ஓட்டுனர்கள் இந்த ஆண்டு முதல் கட்டணத்தில் அதிகரிப்பை சந்திப்பார்கள்.

Covid-19 தொற்றுநோய் காரணமாக 2020 முதல் முடக்கப்பட்பட்டிருந்தBurlington இல் இருந்து pkckering வரை நீண்டுகொண்டிருக்கும் 108-கிலோமீட்டர் அதி வேக சாலையில் உள்ள சுங்கசாவடிகள் பிப்ரவரி 2024 முதல் மாற்றம் காண உள்ளது.

இது தொடர்பில் சுங்கச்சாவடிகளுக்கு பொறுப்பான நிறுவனம் இந்த மாதத்தின் முதலாம் திகதியில் இருந்து புதிய கட்டண அட்டவணை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Most passenger cars, light-duty trucks போன்ற இலகுரக வாகனங்களின் ஓட்டுனர்கள், பயணம் செய்யும் நாள் மற்றும் zone ஐப் பொறுத்து ஒரு கிலோமீட்டருக்கு ஒன்று முதல் 11 cents வரை கட்டணம் அதிகரிக்கும்.

இந்த அதிகரிப்பு சராசரி வாடிக்கையாளருக்கு $5க்கும் குறைவான மாதாந்த அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்றும் அந்நிறுவனம் கூறுகிறது.

அதி வேக பாதையில் நான்கு zones உள்ளன, ஒவ்வொன்றும் நாளின் நேரத்தைப் பொறுத்து வெவ்வேறான rates ஐக் கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக, வார நாட்களில் காலை 7 மணியளவில் QEW மற்றும் நெடுஞ்சாலை 401 க்கு இடையில் பயணிக்கும் போது, மேற்கு நோக்கி ஒரு கிலோமீட்டருக்கு 49cents, கிழ‌க்கு நோக்கி 55cents உம் வசூலிக்கப்படலாம்.

பிப்ரவரி 1, 2024 நிலவரப்படி, அதே தூரத்திற்கு மேற்கு நோக்கி 58cents, கிழக்கு நோக்கி 60cents களும் ஓட்டுனர்களுக்கு செலவாகும்.

மேலும் அட்டவணையின் முழு விவரத்தையும் நெடுஞ்சாலை 407 ETR இணையதளத்தின் வாயிலாக காணலாம்.

Related posts

Trudeau பொதுச் சபையில் கலந்து கொள்கிறார்- அங்கு Biden இறுதி ஐ.நா உரையை ஆற்றுகிறார்

admin

உங்களிற்கான தடுப்பூசிகளை பெறுங்கள் – கனடா வந்தோருக்கான தடுப்பூசிகளை இன்னும் பூர்த்தி செய்யவில்லை

admin

குறைந்த ஊதியம் பெறும் வெளிநாட்டுப் பணியாளர்களைக் கட்டுப்படுத்த குடியேற்ற இலக்குகளை குறைப்பதைக் கனடா கருத்தில் கொள்ள வேண்டும்

admin