கனடா செய்திகள்

பிராந்திய விரிவாக்கத்தைத் தூண்டும் நோக்கிலான ஈரானின் தாக்குதல் – G7 நாடுகள் எச்சரிக்கை

வார இறுதியில் நடைபெற்ற இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலானது Middle East இன் ஸ்திரமின்மையை காட்டுவதுடன், பிராந்திய விரிவாக்கத்தை தூண்டும் அபாயம் காணப்படுகின்றது. மேலும் நூற்றுக்கணக்கான drones மற்றும் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேலை குறிவைக்கும் ஈரானின் முடிவை ‘நேரடியான மற்றும் முன்னோடியில்லாத தாக்குதல்’ என G7 நாடுகளின் தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை கூட்டத்திற்குப் பிறகு தெரிவித்தனர்.

இஸ்ரேல் தனது நேச நாடுகளின் உதவியுடன், பெருமளவிலான தாக்குதலை முறியடிக்க முடிந்தது. இதன் மூலம் குறைந்த சேதத்தை ஏற்படுத்த முடிந்தது. ஈரான் சுமார் 300 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இஸ்ரேலுக்குள் உள்ள இலக்குகளை நோக்கி ஏவியது, ஆனால் இஸ்ரேலிய அதிகாரிகள் அதன் நட்பு நாடுகளும் இணைந்து அவற்றில் 99 சதவீதத்தை இடைமறிக்க முடிந்தது.

இரவோடு இரவாக நடந்த தாக்குதலுக்குப் பிறகு ஈரானைக் கண்டிப்பதில் கனடாவின் அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டன. ஈரானின் இவ் வெட்கக்கேடான தாக்குதலுக்கு ஒரு ஒருங்கிணைந்த இராஜதந்திர பதிலடியை வழங்க கூட்டத்தை கூட்டுவதாக அமெரிக்க ஜனாதிபதி Joe Biden தெரிவித்தார்.

கிட்டத்தட்ட அனைத்து ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளையும் அமெரிக்கப் படைகள் வீழ்த்த உதவியதுடன், ஈரானிய ஆளில்லா விமானங்களை பிரிட்டனின் விமானப்படை சுட்டு வீழ்த்தியுள்ளது.

Gaza வில் ஹமாஸ் போராளிகளுக்கு எதிரான இஸ்ரேலும் ஈரானும் மோதலில் ஈடுபட்டுள்ளன. ஹமாஸ் பணயக்கைதிகளை விடுவித்தல் மற்றும் தேவைப்படும் பாலஸ்தீனியர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குதல் போன்றவற்றின் மூலம் உடனடி மற்றும் நிலையான போர்நிறுத்தத்தைக் கொண்டு வர G7 தலைவர்கள் ஒத்துழைப்பை வழங்கவுள்ளனர். மேலும் ஈரானின் இராணுவத்தின் ஒரு கிளையான IRGC இனை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க Ottawa இற்கு அழுத்தம் வழங்கப்படுகின்றது.

Related posts

June மாத விற்பனை அதிகரித்துள்ள போதிலும் CREA இனால் 2024 இற்கான வீட்டுச் சந்தைக்கான முன்னறிவிப்பு குறைப்பு

admin

கனடாவில் தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான மாற்றங்கள் Ottawa இனால் மேற்கொள்ளப்படுகின்றது

admin

கடுமையான பனிப்பொழிவால் Nova Scotia வில் தொடரும் இடையூறுகள் !

Editor