கனடா செய்திகள்

East-end Toronto இல் நடந்த துப்பாக்கி சூட்டில் Pickering man ஒருவர் உயிரிழந்துள்ளார்

Toronto இன் கிழக்கு முனையில் சனிக்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டின் போது 28 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விசாரணையின் போது உயிரிழந்தவர் Pickering குடியிருப்பைச் சேர்ந்த Sulakshan Selvasingam என அடையாளம் காணப்பட்டார்.

பாதிக்கப்பட்டவர் இருந்த காரின் மீது சந்தேக நபர் பல துப்பாக்கிச் சூடு நடத்தியதாக புலனாய்வாளர்கள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்தனர். Ellesmere வீதிக்கு வடக்கே Warden Avenue இல் உள்ள எரிவாயு நிலையத்திற்கு இரவு 10:15 மணியளவில் Toronto பொலிஸ் அதிகாரிகள் அழைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் வந்து பார்த்தபோது, ​​காயமடைந்தவரைக் உயிருக்கு ஆபத்தான நிலையில் கண்டுபிடித்ததுடன், அவர் ஒரு trauma centre கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் அவர் மருத்துவமனையில் சிகிற்சை பலன் இன்றி இறந்தார்.

அதிகாரிகள் இன்னமும் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளியை கண்டு பிடிக்கவில்லை. சந்தேக நபர்கள் ஒரு வாகனத்தில் அந்த பகுதியிலிருந்து தப்பிச் சென்றதாக தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து விசாரணையாளர்கள் துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் சாட்சிகளுடன் பேச முயல்கின்றனர்.

Related posts

Navalny இன் சிறைவாசம் மற்றும் மரணத்தில் பங்கு வகித்த மேலும் 13 ரஷ்யர்களிற்கு கனடா தடை விதிப்பு

admin

Ontario இல் குற்றம் சாட்டப்பட்ட வாகனத் திருடர்களின் ஓட்டுநர் உரிமத்திற்கு வாழ்நாள் தடை விதிக்கும் சாத்தியம்

admin

GTA மேற்கொண்ட சுற்றி வளைப்பில் 2.2M$ மதிப்புள்ள களவாடப்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளது.

Editor