கனடா செய்திகள்

ஒரு வாரத்துக்கும் மேலாக Brampton இல் இருந்து காணாமல் போன நபரை தேடும் பணி தொடர்ந்து வருகின்றது

ஒரு வாரத்திற்கு முன்பு Brampton இல் இருந்து காணாமல் போன 64 வயது முதியவர் யோகராஜாவைக் கண்டுபிடிக்கும் பணியில் York பிராந்திய காவல்துறையினர் Peel பிராந்தியத்தில் உள்ள போலீஸாருக்கு உதவி வருகின்றனர்.

யோகராஜா காணாமல் போவதற்கு முன் July 31 காலை 11:20 மணியளவில் MacLaughlin சாலை வடக்கு மற்றும் Mayfield சாலைக்கு தெற்கே உள்ள Kirk மற்றும் Whitepoppy drives இற்கு அருகில் காணப்பட்டார்.

காணாமல் போனவர் 64 வயதான குட்டையான கருப்பு மற்றும் வெள்ளை முடி, நடுத்தர முதல் கருமையான நிறம், ஐந்தடி இரண்டு அங்குல உயரம் மற்றும் 150 பவுண்டுகள் கொண்டவர் என விவரிக்கப்படுகிறார். மேலும் அவர் கடைசியாக நீல நிற polo சட்டை, கருப்பு பேன்ட் மற்றும் கருப்பு ஓடும் காலணிகளை அணிந்திருந்தார். அத்தோடு அவர் Ontario உரிமத் தகடு CFAZ745 இனைக் கொண்ட 2019 சாம்பல் நிற Honda Odyssey இனைக் ஓட்டிக்கொண்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. யோகராஜாவின் வாகனம் ஆகஸ்ட் 6 ஆம் திகதி King நகரில் காணப்பட்டதாக Peel பிராந்திய பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல் போன நபரின் இருப்பிடம் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் Peel பிராந்திய காவல்துறையின் 22 ஆவது பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தை 905-453-2121 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Related posts

கனேடிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் emissions இனை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்க கோரிக்கை

admin

June மாத விற்பனை அதிகரித்துள்ள போதிலும் CREA இனால் 2024 இற்கான வீட்டுச் சந்தைக்கான முன்னறிவிப்பு குறைப்பு

admin

செங்கடலில் போக்குவரத்து கப்பல்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு கனடா மற்றும் நட்பு நாடுகள் “Houthi” கிளர்ச்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

Editor