பரவலான ஊடகங்களுக்கு மத்தியில் திங்கள்கிழமை காலை Ottawa இல் பிரதம மந்திரி Justin Trudeau தனது பதவி விலகலை அறிவிக்க உள்ளார். Rideau Hall இல் காலை 10.45 மணிக்கு நடைபெறும் பிரதமரின் பேச்சானது CityNews 24/7 இல் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
பொதுக் கருத்துக் கணிப்புகளின் படி Liberals இனை Conservatives பின்தள்ளியதுடன், Trudeau இனை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் அவரது எம்.பி.க்களிடம் இருந்து அதிகரித்து வருகின்றன.
Trudeau பிரதமராக நீடிப்பாரா அல்லது அவர் பதவி விலக முடிவு செய்தால் Liberal தலைமைப் போட்டியின் மூலம் இடைக்காலத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.