Nova Scotia பாராளுமன்ற உறுப்பினர் Jaime Battiste வியாழக்கிழமை போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளதுடன் தனது ஆதரவை முன்னாள் Bank of Canada ஆளுநர் Mark Carney க்கு வழங்குவதாக தெரிணவித்துள்ளமையானது லிபரல் கட்சி தலைமை வேட்பாளர்களின் எண்ணிக்கையை ஐந்தாகக் குறைந்துள்ளது.
லிபரல் கட்சியை வழிநடத்தும் முதல் பழங்குடி வேட்பாளர் ஆனதில் பெருமைப்படுவதாகவும் Carney ஐ ஆதரிப்பதே தனது முன்னுரிமைகளை ஆதரிப்பதற்கான சிறந்த வழி என்று தான் நம்புவதாகவும் Battiste சமூக ஊடகமொன்றில் வெளியிட்டுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வாரம் நடத்தப்பட்ட Leger கருத்துக் கணிப்பில் லிபரல் தலைமைத்துவத்திற்கான போட்டியில் Carney 34 சதவீத ஆதரவையும் முன்னாள் நிதியமைச்சர் Freeland 14 சதவீத ஆதரவுடன் இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
லிபரல் வாக்காளர்களிடையே Carney -57 சதவீத வாக்குகளையும் Freeland -17 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளதுடன் Gould பொதுவாக கனேடியர்களிடையேயும், குறிப்பாக லிபரல் வாக்காளர்களிடையேயும் 4 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளார்.