பிரான்ஸில் தயாராகியிருக்கும் கல்லறை இரகசியங்கள் முழு நீள திரைப்படத்தின் முதல் விளம்பர பதாகை (poster) கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது.
திருமலையூரானின் எழுத்து இயக்கத்தில் தயாராகி இருக்கும் இப்படத்தினை பிரெஞ்சு கலாச்சார மையம் ஒன்றும் கீதாலயமும் இணைந்து தயாரிக்கிறார்கள்.
அந்த பிரெஞ்சு கலாச்சார மையத்தின் தலைமை அதிகாரிகளே இதனை வெளியிட்டு வைத்தார்கள்.
இப்படத்தில் பிரெஞ்சு கலைஞர்கள், இந்திய கலைஞர்கள், பாரிஸ் வாழ் முன்னணி தமிழ் கலைஞர்கள் நடிக்கிறார்கள்.
இப்படம் பிரெஞ்சு, தமிழ் என இருதரப்பு ரசிகர்களுக்கான திரைப்படமாக அமையும் எனவும்,இதனை இருமொழிகளிலும் (Dubbing ) டப்பிங் செய்யும் முயற்சியில் தான் ஈடுபட்டு வருவதாகவும்
இப்படத்தின் அனைத்துப் துறையிலும் தீவிர பங்காற்றும் திரு. திருமலையூரான் அசோக்குமார் அவர்கள் தெரிவிக்கிறார்.
இப்படமும் புகலிட நம்மவர் சினிமா வரலாற்றில் ஒரு பதிவாக அமையும் என நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.