கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சகம் கடந்த ஆண்டு மே மாதம் இணையவழி கடவுச்சீட்டு தொடர்பாக அறிவிப்பொன்றை வெளியிட்டது. இதற்கமைய குறிப்பிட்ட கனடியர்கள் தங்கள் கடவுச்சீட்டை இணையவழியில் புதுப்பிக்க அனுமதி வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டது.
மேலும் இணையவழி மூலம் கடவுச்சீட்டை புதுப்பிக்கவும், கட்டணம் செலுத்தவும் மற்றும் அவர்களின் கடவுச்சீட்டு புகைப்படத்தை வசதியாக பதிவேற்றவும் ஒரு விருப்பத்தை வழங்க உள்ளதாகவும் அறிவித்தது.
இந்த நிலையில்,இந்த திட்டத்தை 2023 இல் இருந்து நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்று தெரிவித்திருந்த போதும் இதுவரை நடைமுறைக்கு உட்படுத்தப்படவில்லை.
அத்துடன் நம்பகமான மற்றும் பாதுகாப்பான இணையவழி கடவுச்சீட்டு புதுப்பித்தல் முறையை உருவாக்குவதற்கு அமைச்சகம் உறுதியுடன் உள்ளது. இருப்பினும் இதற்கு எவ்வளவு காலம் ஆகும் என இதுவரையில் குறிப்பிடப்படவில்லை.