கனடா செய்திகள்

கனடாவின் Toronto மற்றும் Vancouver இல் வசிப்பவர்களின் வாடகை தொடர்பான தாக்கங்கள்

2023 இல் கனடா முழுவதும் உள்ள வாடகைதாரர்கள் குறைந்த வாடகை வெற்றிடங்களை எதிர்கொண்ட போதும் Toronto மற்றும் Vancouver நகரங்களில் வசிக்கும் வாடகை தாரர்கள் அதிகளவான வாடகை பணம் செலுத்துகின்றனர்.

அத்துடன் மன அழுத்தங்களையும் எதிர்கொள்கின்றனர் எனக் கனடா புள்ளிவிபரத்திணைக்களம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை 2016 முதல் 2022 வரையான காலப்பகுதியில் வயதானவர்களை விட 15 முதல் 29 வயதுடையவர்கள் தனிமையாகவும், குறைவான எதிர்கால நம்பிக்கையுடன் இருப்பதாகவும் அறிய முடிகிறது.

மேலு‌ம் 2021முதல் 2023 வரை Toronto மற்றும் Vabcouver நகரங்களில் வசிப்பவர்கள் B.Cயில் உள்ள மற்றவர்களை விட குறைவான வாழ்க்கைத் திருப்தியுடன் வாழ்வதாக கனடா புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன.

அதே நேரத்தில் Toronto மற்றும் Vancouver நகரங்களில் வசிப்பவர்கள் தங்கள் மாகாணங்களில் வேறு இடங்களில் வசிப்பவர்களைக் காட்டிலும் தங்குமிட செலவுகளின் நிதி நெருக்கடியால் அவர்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் அவர்களின் உணர்வுகளும் பாதிக்கப்படலாம் என குறிப்பிடப்படுகிறது.

Related posts

பாலஸ்தீனியர்களுக்கான தற்காலிக விசா திட்டம் தொடர்பில் கனடா குடிவரவு அமைச்சர் வெளியிட்ட தகவல்.

Editor

‘புகலிடம் கோருவது எளிதானது அல்ல’: கனடா அகதிகளை global ad campaign இல் எச்சரிப்பு

admin

தடுப்பூசி வளர்ச்சியை விரைவுபடுத்த Liberals ஒரு தொற்றுநோய் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்குகின்றனர்

admin