கனடா செய்திகள்

இந்த வருடத்திற்கான நிதிப்பற்றாக்குறை 23.6 பில்லியன் டாலராக இருக்கும் ; கனேடிய நிதியமைச்சர்

கனேடிய நிதியமைச்சர் Chrystia Freeland எதிர்வரும் ஏப்ரல் 16 ம் திகதி அன்று Liberal கூட்டாட்சி வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள கனேடிய அரசியலில் வாழ்க்கைச் செலவீனங்கள் அதிகரிப்பால் Liberal கூட்டாட்சி அரசாங்கத்தின் திட்டத்தை செயல்படுத்த எண்ணியுள்ளதாக கனேடிய நிதியமைச்சர் Chrystia Freeland தெரிவித்துள்ளார்.

Liberal கூட்டாட்சி அரசாங்கத்தின் பொருளாதாரத் திட்டமானது அதிகமான வீடுகளைக் கட்டுவதற்கும், நல்ல வேலைகளை பெ‌ற்று‌க்கொள்வதற்கும் வாழ்கை செலவை கொண்டு செல்லவும் உகந்ததாகும் என Chrystia Freeland செய்தி ஊடகம் ஒன்றிற்கு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இதேவேளை, அதிக வட்டி விகிதங்கள் பொருளாதாரத்தின் மீது தடையை ஏற்படுத்தும் எனவும் Liberal அரசாங்கத்தின் மீது நிதி அழுத்தங்களை அதிகப்படுத்தும் எனவும் குறிப்பட்டார்.

அத்துடன், இந்த நிதியாண்டில் நிதி பற்றாக்குறையானது எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்காது என மத்திய அரசு தெரிவித்ததை அடுத்து,
நிதித் துறையின் கூற்றுப்படி, இந்த வருடத்திற்கான நிதிப்பற்றாக்குறை டிசம்பர் மாத இறுதிக்குள் 23.6 பில்லியன் டாலராக இருக்கும் என எதிர்பார்க்கபட்டுள்ளது.

Related posts

$70 மில்லியன் வெற்றி பண பெறுமதியான Lotto Max ticket , Toronto வில் விற்பனை.

Canadatamilnews

NDP மற்றும் Bloc ஆகியன Conservative நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்க மறுப்பதாக அறிவித்துள்ளன

admin

Trudeau D-Day இன் 80 ஆவது நிறைவை France இன் Juno Beach இல் கொண்டாடவுள்ளார்

admin