கனடா செய்திகள்

அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ​​Ontarioவின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதாக நிதி அமைச்சர் உறுதி;

அடுத்த Ontario வரவு செலவுத் திட்டத்தை வழங்கும்போது, ​​வரிகள் மற்றும் கட்டணங்களை உயர்த்தாமல் Ontarioவின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதாக Finance Minister Peter Bethlenfalvy, உறுதியளித்துள்ளார்.

இந்த நிலையில் அவர் கடந்த மாதம் நிதி பற்றிய ஒரு புது தகவலை வழங்கியபோது, Ontario ​​வில் $4.5 பில்லியன் நிதி பற்றாக்குறையுடன் இந்த ஆண்டு முடிவடையும் என அவர் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் அவர் எதிர்பார்த்திருந்த $1.3 பில்லியன் பற்றாக்குறையை விட இது கணிசமாக அதிகமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் Ontarioவின் நிதிப் பொறுப்புக்கூறல் அலுவலகம் (FAO) இந்த ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் $2.3 பில்லியனுக்கும் அதிகமாக செலவழித்துள்ளதாகத் தெரிவித்தது. அத்துடன்,
FAO குறிப்பிட்டது போல், மாகாணத்தின் தற்செயல் நிதி $4 பில்லியனாக இருந்ததுடன் நிதியாண்டைத் தொடங்கிய பிறகு $5.1 பில்லியனாக அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வெளிநாட்டு தலையீட்டை எதிர்கொள்ள Trudeau அரசாங்கம் தயாராகிறது

admin

சர்வதேச மாணவர் அனுமதிகளின் எண்ணிக்கையை மேலும் குறைப்பதாக Ottawa அறிவித்துள்ளது

admin

இந்த வாரம் ASEAN உச்சிமாநாடு மற்றும் உக்ரைன் பாதுகாப்பு கூட்டங்களுக்கு Trudeau செல்கின்றார்

admin