Ottawa கனடாவின் வாகனத் தொழில் துறையில் மறுமலர்ச்சியை அனுபவித்து வருகிறது, இது எரிவாயு மூலம் இயங்கும் வாகனங்களை உருவாக்குவதில் இருந்து மின்கலங்களில் இயங்கும் வாகனங்களுக்கு மாறியுள்ளது. ஆனால் சிலர் உள்ளூர் வேலைகளைப் பாதுகாப்பதில் எச்சரிக்கையை எழுப்பி வருகின்றனர்.
தெற்கு Ottawa வெளிநாட்டு வாகன உற்பத்தியாளர்களின் மையமாக மாறியுள்ளதுடன், இவர்கள் 2020 முதல் பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்து மின்சார வாகன மின்கல ஆலைகளை உருவாக்கியுள்ளனர்
தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஆதரவாக கனேடியர்கள் ஓரங்கட்டப்படுவதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் இப்பகுதியில் உள்ள 180 திறமையான தொழிலாளர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
Honda தனது assembly plant இற்கு பதிலாக battery plant இனை உருவாக்கவுள்ளது. இது $15 பில்லியன் திட்டத்தின் ஒரு பகுதியாக முழு மின்சார வாகனங்களை தயாரிப்பதற்கு மறுபரிசீலனை செய்யப்படுகின்றது. இந்த திட்டத்துடன் 1,000 புதிய வேலைகள் இணைக்கப்படும் என நிறுவனம் கூறியுள்ளது.