கனடா செய்திகள்

கனேடியர்களில் 9 பேரில் ஒருவருக்கு COVID நோய்த் தொற்றின் நீண்ட கால அறிகுறிகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கனேடிய புள்ளிவிபரத் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டது.

3.5 மில்லியன் கனடியர்கள் COVID நோய்த் தொற்றின் நீண்ட கால அறிகுறிகளை எதிர்கொள்கின்றனர்.

COVID நோய்த் தொற்றுக்குப் பின்னர் மூன்று மாதங்கள் அல்லது அதற்கு மேல் அறிகுறிகள் நீடித்தால் அது நோய்த் தொற்றின் நீண்டகால அறிகுறியாக வரையறுக்கப்படுகிறது.

நீண்ட கால நோய்த் தொற்றின் அறிகுறிகளை கொண்டவர்களில், 80 சதவீதம் பேர் ஆறு மாதங்கள் அல்லது அதற்கும் மேலாக அவற்றைக் கொண்டுள்ளனர்.

Related posts

அக்டோபர் 1 அன்று Ontario குறைந்தபட்ச ஊதியத்தை ஒரு மணி நேரத்திற்கு $17.20 ஆக உயர்த்தியது

admin

36 ஆண்டுகளின் பின்னர் மிகப்பெரிய NATO பயிற்சி!

Editor

New York இல் பயங்கரவாத சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் கனடியர் ஒருவர் Quebec இல் கைது செய்யப்பட்டார்

admin