உறுதிப்படுத்தப்பட்ட தட்டம்மை நோயாளர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்வடைந்ததால் Quebec’s இன் சுகாதார அமைச்சகம் மாகாணம் முழுவதுமுள்ள பாடசாலைகள் மற்றும் தொழில் ஸ்தாபனங்கள் போன்றவற்றிக்கு விழிப்புணர்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
The Lester B. Pearson School Board இல் தடுப்பூசி தகவல் மற்றும் நோய் அறிகுறிகள், மற்றும் அது எவ்வாறு பரவுகிறது என்பது பற்றியும் தட்டம்மை நோய், சளி போன்ற தடுப்பூசிக்கான பதிவை எவ்வாறு மேற்கொள்வது போன்ற விழிப்புணர்வு செய்திகளை பெற்றோருக்கு வழங்கியுள்ளது.
அத்துடன் ஆரம்ப பள்ளிகளுக்கு முன்னுரிமை அளித்து அனைத்து பள்ளிகளிலும் தடுப்பூசி வழங்கும் மையங்களை அமைக்க உள்ளூர் CIUSSS உடன் பள்ளி சமூகங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட்டு வருகின்றது.
இதேவேளை English Montreal School Board ஆனது பெற்றோருக்கு கடுமையான கடிதம் ஒன்றை அனுப்பி, விரைவாக தடுப்பூசி போடுமாறு பரிந்துரைக்க பட்டுள்ளது.
அத்துடன் ஒரு பள்ளியில் தட்டம்மை நோய் ஏற்பட்டால், குறித்த நபர்களின் வீட்டில் உள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் நோய் அடையாளம் காணப்பட்ட 14 நாட்களுக்குப் பிறகு அவர்கள் பள்ளிக்கு வரலாம் எனவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் தடுப்பூசிப் பதிவேடுகளைச் சரிபார்த்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளபட்டுள்ளனர்.