கனடா செய்திகள்

Paris இல் நடைபெற்ற Paralympic போட்டியில் நீச்சல் வீரர் Nicholas Bennett கனடாவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றார்

திங்கட்கிழமை Paris இல் நடைபெற்ற Paralympic போட்டியில் Parksville, B.C இனைச் சேர்ந்த 20 வயதான Nicholas Bennett ஆண்களுக்கான 100-metre breaststroke இல் முதல் இடத்தைப் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றார். மேலும் இது Paris இல் இவரது இரண்டாவது பதக்கமாகும். இவர் 200-metre freestyle போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பந்தயத்தில் 1:03.98 நேரத்துடன் ஒரு நிமிடம் நான்கு வினாடிகளுக்குள் சென்ற ஒரே கனேடிய நீச்சல் வீரர் ஆவார். இப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் Jake Michel 1:04.27 நிமிடங்களில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அத்தோடு ஜப்பானின் Naohide Yamaguchi 1:04.94 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார். உலக சாதனையாளரான Yamaguchi கடந்த ஆண்டு இங்கிலாந்தின் Manchester இல் நடந்த உலகப் பட்டத்திற்காக போட்டியில் Bennett இனை வீழ்த்தியிருந்தார்.

மூன்று வயதில் autism spectrum disorder இனால் கண்டறியப்பட்ட Bennett அவரது சகோதரி Haley Bennett இனால் பயிற்றுவிக்கப்படுகிறார். 2012 இல் Benoit Huot இற்குப் பிறகு நீச்சலில் Paralympic தங்கப் பதக்கம் வென்ற முதல் கனேடிய வீரர் ஆவார். அறிவார்ந்த குறைபாடுள்ள விளையாட்டு வீரர்களுக்கான S14 வகைப்பாட்டில் பந்தயத்தில் கலந்து கொள்கிறார். இவ் நீச்சல் போட்டிகள் சனிக்கிழமை வரை தொடரும்.

Related posts

கனமழையால் GTA முழுவதும் ஏற்ப்பட்ட பாரிய வெள்ளம்

admin

கனடாவின் பெரும்பகுதி இயல்பை விட வெப்பமான வீழ்ச்சியைக் கொண்டிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது: The Weather Network

admin

Durham இல் இடைத்தேர்தல் – பிரதமர் வெளியிட்டுள்ள தகவல்!

Editor