கனடா செய்திகள்

கனேடிய விமான நிலையத்தில் வெடிபொருட்கள் மற்றும் பிற அச்சுறுத்தல்களைக் கண்டறிய CT scanners பொருத்தப்பட்டுள்ளன

வெடிபொருட்கள் மற்றும் பிற அச்சுறுத்தல்களைக் கண்டறிய அரை நூற்றாண்டு பழமையான தொழில்நுட்பமான CT scanners களைப் பயன்படுத்திய முதல் கனேடிய விமான நிலையமாக Vancouver மாறியுள்ளது. கனேடிய விமானப் போக்குவரத்து பாதுகாப்பு ஆணையகத்தின்படி, இந்த மாற்றம் மடிக்கணினிகள் மற்றும் திரவங்களை பாதுகாப்பில் இருந்து எடுத்துச் செல்லும் தேவையை நீக்குகிறது.

மேலும் கணினிமயமாக்கப்பட்ட X-ray imaging மூலம் 360 degree காட்சிகளை வழங்கும் தொழில்நுட்பத்தை வரும் ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள விமான நிலைய சோதனைச் சாவடிகளில் நிறுவ திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. இதன் விளைவாக பயணிகள் இனி தங்கள் எடுத்துச் செல்லும் பைகளில் இருந்து திரவங்கள், aerosols, ஜெல்கள் அல்லது பெரிய electronics laptops உள்ளிட்டவற்றை அகற்ற வேண்டியதில்லை என்று Vancouver சர்வதேச விமான நிலைய தலைமை நிர்வாக அதிகாரி Tamara Vrooman கூறினார்.

இந்த திட்டம் Vancouver விமான நிலையத்தில் ஐந்து இயந்திரங்கள் பாதுகாப்பு screening பகுதியில் conveyer belts களை ஒட்டி செப்டம்பர் 4 தொடக்கம் செயல்படுத்தப்படுவதாக விமான நிலைய அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Crown corporation இவ் திட்டத்திற்காக முதல் வருடத்திற்கு $23 மில்லியனுக்கு நிதியளித்தது. அதே நேரம் Vancouver விமான நிலையம் மேலும் $30 மில்லியன் முதலீடு செய்து இடத்தைப் புதுப்பிக்கவும், gear இற்கு இடமளிக்கவும் செய்ததாக விமான நிலைய ஆணையகம் தெரிவித்துள்ளது.

Related posts

Haitiயில் உள்ள கனேடியர்களின் நிலை தொடர்ந்தும் ஆபத்தில்;

Editor

December மாதத்திற்கான வருடாந்த பணவீக்க அளவீடு 1.8%

canadanews

உக்ரைனுக்கு ஆதரவாக drone தயாரிப்பதற்கும் வெடிமருந்துகளுக்கும் மில்லியன் நிதி ஒதுக்கீடு

admin