கனடா செய்திகள்

கனடாவின் பணவீக்க விகிதம் கடந்த மாதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது;

கனடாவின் வருடாந்த பணவீக்க விகிதம் கடந்த மாதத்தில் எதிர்பாராத விதமாக 2.8 சதவீதமாக குறைந்துள்ளது.

கனேடிய புள்ளிவிபரத்திணைக்களம் கடந்த பெப்ரவரியில் வெளியிட்ட நுகர்வோர் விலைக் குறியீட்டு அறிக்கையின் அடிப்படையில் தொடர்ந்தும் இரண்டாவது மாதமாக பணவீக்கம் குறைவடைந்து இருப்பதைக் காட்டுகிறது.

இதே நேரம், கனடாவில் எரிபொருளின் விலை அதிகரித்தமையால் , பணவீக்க விகிதமானது கடந்த ஜனவரி மாதத்தில் 2.9 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்கும் என பொருளாதார வல்லுநர்களால் எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், wireless சேவைகளுக்கான விலைகள் 26.5 சதவீதமாக குறைந்துள்ளதுடன் இணைய விலைகள் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 13.2 சதவீதத்தினால் குறைந்துள்ளதாகவும் கனேடிய மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அத்துடன் பெப்ரவரியில் உணவகங்களின் விலைகள் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 2.4 சதவீதம் உயர்ந்துள்ளது.

இதற்கிடையில்,அடகு வட்டி 26.3 சதவீதத்தினாலும் வாடகை பெறுமதி 8.2 சதவீதத்தினாலும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை Bank of canada அதன் முக்கிய வட்டி விகிதத்தை June மாதமளவில் குறைக்கத் தொடங்கும் என பொருளாதார வல்லுநர்கள் பரவலாக எதிர்பார்க்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

காட்டுத்தீ காரணமாக Quebec இன் அதிகபட்ச பாதுகாப்பு சிறையான Port-Cartier இனை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டது

admin

கனடாவில் வரவிருக்கும் காட்டுத்தீ தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என்கிறார் மத்திய அமைச்சர்.

Editor

மெதுவாக குறைந்து வரும் சில கனேடிய உணவுகளின் விலைகள் : StatCan

admin