கனடா செய்திகள்

ஐக்கிய இராச்சியத்தில் ஏற்பட்ட அரசியல் அலை மாற்றத்தைத் தொடர்ந்து Joly தனது புதிய British பிரதிநிதியை சந்திக்கின்றார்

ஐக்கிய இராச்சியத்தில் தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, வெளியுறவுத்துறை அமைச்சர் Mélanie Joly தனது புதிய British பிரதிநிதி David Lammy இனை முதன் முறையாக சந்தித்தார். foreign, Commonwealth மற்றும் development affairs இற்காக U.K வெளியுறவுத்துறை செயலாளராக Lammy நியமிக்கப்பட்ட பிறகு, இருவருக்கும் இடையேயான முதல் சந்திப்பு இதுவாகும்.

14 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கன்சர்வேடிவ் அரசு பதவியில் இருந்து அகற்றப்பட்டது. பிரிட்டனில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் கனடாவில் U.K உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான சில நம்பிக்கைகளை புதுப்பித்துள்ளது.

Joly மற்றும் Lammy இற்கு இடையிலான சந்திப்பின் போது நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவுகளை ஆழமாக்குவதற்கான வழிகளை இருவரும் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டங்களைப் பாதுகாக்கும் அதே வேளையில் பரஸ்பர புவிசார் அரசியல் அபாயங்களை எதிர்கொள்ளும் வாய்ப்புகளைப் பயன்படுத்த ஒப்புக்கொண்டனர் எனவும், உக்ரைனுக்கான நிதி மற்றும் இராணுவ ஆதரவு மற்றும் மத்திய கிழக்கில் பாதுகாப்பு பற்றி இருவரும் பேசியதாகவும் Global Affairs Canada தெரிவித்துள்ளது.

மேலும் செவ்வாய்கிழமை Washington, D.C. இல் நடைபெறும் NATO தலைவர்களின் உச்சி மாநாட்டில் பிரதமர் Justin Trudeau உடன் Joly இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

நிரந்தர வதிவிடத்திற்கான பாதையை வழங்கும் இரண்டு முக்கிய மூலங்களை Quebec முடக்குகிறது

admin

Quebec வரலாற்று மழையில் இருந்து மீண்டு வருகிறது

admin

கனடாவில் குண்டுப் பீதியை ஏற்படுத்தியவர் வெளிநாடொன்றில் கைது.

Canadatamilnews