பணவீக்கத்தின் சரிவு காரணமாக, Bank of Canada அதன் முக்கிய கொள்கை விகிதத்தை அரை சதவிகிதம் குறைத்துள்ளது. பணவீக்கம் இப்போது இரண்டு சதவீத இலக்கை நோக்கி திரும்பியுள்ளதாகவும், அதை இலக்குக்கு நெருக்கமாக வைத்திருக்க விரும்புவதாகவும் Governor Macklem தெரிவித்தார்.
கனடாவின் பணவீக்க விகிதம் செப்டம்பரில் 1.6 சதவீதமாகக் குறைந்துள்ளது, இது ஒரு பெரிய விகிதக் குறைப்புக்கான முன்னறிவிப்பாளர்களின் எதிர்பார்ப்புகளை உறுதிப்படுத்துகிறது. ஜூன் மாதத்திலிருந்து மத்திய வங்கியின் நான்காவது தொடர்ச்சியான வட்டி விகிதக் குறைப்பு இதுவாகும். மேலும் அதன் policy விகிதம் இப்போது ஐந்து சதவீத உயரத்தில் இருந்து 3.75 சதவீதமாக உள்ளது.
வட்டி விகிதங்கள் தொடர்ந்து குறைந்து வருவதால், Bank of Canada பொருளாதார வளர்ச்சியை 2025 மற்றும் 2026 இல் மீண்டும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அத்தோடு பொருளாதாரம் அதன் முன்னறிவிப்புக்கு ஏற்ப உருவாகும் வரை, அதன் முக்கிய வட்டி விகிதத்தை மேலும் குறைக்க மத்திய வங்கி எதிர்பார்க்கிறது என்று Macklem கூறினார்.