கனடா செய்திகள்

Bank of canadaவின் வட்டி விகிதம் 5% இல் நிலையாக உள்ளது.

கனடா வங்கியின் முக்கிய வட்டி விகிதம் புதன்கிழமை 5 சதவீதத்தில் இருந்தது. அத்துடன் விகிதங்கள் எப்போது குறைக்கத்தொடங்குவது எ‌ன்பது பற்றியும் விவாதிக்கத் தொடங்கியுள்ளது.

இது தொடர்பில் Macklem கருத்து வெளியிட்ட போது, Bank of canada அதன் முக்கிய வட்டி விகிதத்தை வைத்திருக்கும் முடிவானது ஆச்சரியமளிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், Bank of canada எப்போது வட்டி விகிதக் குறைப்பு மேற்கொள்ளும் என பொருளாதார வல்லுநர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்றும்,கொள்கை விகித அதிகரிப்பை நாங்கள் நிராகரித்தோம் என்று அர்த்தமல்ல என்றும் புதிய முன்னேற்றங்கள் பணவீக்கத்தை அதிகப்படுத்தினால், நாம் இன்னும் விகிதங்களை உயர்த்த வேண்டியிருக்கும் எனவும் அவர் மேலும் கூறினார்.

மத்திய வங்கி அதன் கொள்கை விகிதத்தை சீராக வைத்திருக்கவும்,குறைந்த பணவீக்கத்துடன் பலவீனமான பொருளாதார வளர்ச்சி என்பவற்றைக் கண்காணிக்கவும் அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் அடிப்படை விலை மாற்றங்கள் அதிகமாக இருந்ததன் காரணமாக கனடாவின் வருடாந்த பணவீக்க விகிதம் December மாதத்தில் 3.4 சதவீதமாக உயர்ந்தது. அதே நேரத்தில் பணவீக்கமானது 2025 இல் இரண்டு சதவீதத்திற்கு திரும்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

வியாழன் முதல் 4,100 Ontario convenience stores மது விற்பதற்கான உரிமம் பெற்றுள்ளன

admin

தென்னாப்பிரிக்காவின் ICJ வழக்கை ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் பிரதமர் Trudeau !

Editor

பிரதமர் Justin Trudeauஐ ராஜினாமா செய்யுமாறு அழைப்பு விடுக்கும் கடிதத்தில் கையெழுத்திட்டதை பகிரங்கமாக உறுதிப்படுத்திய MP

Canadatamilnews